கர்த்தராம் தேவனை உயர்த்தியே
அவர் நாமத்தை துதிப்போம்
1. அதிசயமாய் நம்மை மீட்டவரே
ஆலோசனை தந்து நடத்தினாரே
நித்திய கிருபை ஈந்துமே என்றும்
நிர்மலராய் நம்மை நிறுத்திடவே
2. சாத்தானின் சோதனை வந்த வேளை
சோர்ந்திடா என்னுள்ளில் பெலமளித்தார்
தாங்கினாரே தம் வன்கரத்தாலே
தற்பரன் அன்பதை எண்ணிடுவோம்
3. கொடுமையின் சீறல்கள் மோதுகையில்
ஏழைக்கு பெலனும் திடனானாரே
வெள்ளம் பெருகினும் வல்ல அரணுமாய்
இருப்பவர் யெகோவா எமக்கே
4. கிருபையினால் நம்மை காத்தவரே
நிறைவான அன்பினால் நிறைத்தவரே
மாசற்றோராய் இப்பாரினில் ஜீவிக்க
பாசம் கொண்டே எம்மை அழைத்தனரே
5. மேகத்தில் மேசியா வந்திடுவார்
ஏகமாய் நம்மையும் சேர்த்திடவே
ஆளுவோமே நாம் அன்பரோடேன்றும்
அகமகிழ்ந்தே யுகா யுகமாய்
HOME
More Songs